அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம் ஆடுதுறையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76வது பிறந்த நாள் வருகிற 24ஆம் தேதி நடைபெறுகிறது. அதனையொட்டி ஆலோசனை கூட்டம் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளரும் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான ஏவிகே அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பாரதிமோகன் கலந்து கொண்டு பேசுகையில்: - வரும் 24ஆம் தேதி அம்மா பிறந்த நாள் அன்று ஜெயலலிதாவின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். கண் தானம், ரத்த தானம் செய்தல், மருத்துவ முகாம் நடத்துதல், கவிதை போட்டி, கட்டுரைப் போட்டி, கோலப்போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல், மாணவ, மாணவியா் பயன்பெறும் வகையில் அவா்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குதல் போன்றவற்றை ஒவ்வொரு ஊராட்சியிலும் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். இதில் அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட மகளிர் அணி தலைவர் தமிழ்செல்வி வீரமுத்து, மீனவர் பிரிவு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் ரவி, அம்மா பேரவை செயலாளர் தங்க நடராஜன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் பங்கு சேகர், இளைஞர் அணி செயலாளர் ராஜ்குமார், பேரூராட்சி செயலாளர்கள் வேப்பத்தூர் முருகானந்தம், திருபுவனம் சிங் செல்வராஜ், ஆடுதுறை செல்வம், திருவிடைமருதூர் பாபு மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.