அலமேலுபுரம் பூண்டியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்

179பார்த்தது
அலமேலுபுரம் பூண்டியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்
அலமேலுபுரம் பூண்டியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்.
திருக்காட்டுப்பள்ளி அருகே அலமேலுபுரம் பூண்டியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை சிறப்பு அழைப்பாளராக திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். பூதலூர் ஒன்றியக் குழு தலைவர் கல்லணை செல்லக்கண்ணு, ஊராட்சி மன்ற தலைவர் என். மலர்கொடி முன்னிலை வகித்தனர். பூதலூர் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரம், கோவிலடி ஆரம்ப சுகாதார மருத்துவமனை மருத்துவ அலுவலர் லதா, சுகாதார ஆய்வாளர் ராமநாதன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் 887 பேருக்குபரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி