கண்டமங்கலம் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

70பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி அருகே கண்டமங்கலத்தில் வாத்தலை நாச்சியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து கடந்த 8ம் தேதி காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. காலை 10 மணிக்கு காவேரி ஆற்றில் இருந்து யானை மீது தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. 9ம் தேதி காலை அம்மனுக்கு விசேஷ திருமஞ்சனமும், மூர்த்தி ஹோமமும் நடந்து. மாலை முதல் கால பூஜைகள் தொடங்கியது. விழாவில் முக்கிய தினமாக இன்று காலை 6 மணிக்கு 6ம் கால பூஜையை அதைத் தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடந்து மேல தாளங்கள் இசைக்க யாத்ரா தானத்துடன் மகா தீபாரதனை நடந்து கடம் புறப்பட்டு விமானங்களை அடைந்தது. அங்கு காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் அதை தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும், ராஜகோபுரத்திற்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர் கும்பாபிஷேகம் நடந்து மகா தீபாரதனை காட்டப்பட்டது. மாலை மகாபிஷேகத்துடன் இரவு வான வேடிக்கையும், சுவாமி புறப்பாடும் நடந்தது. பூஜையை சுந்தர நீலகண்ட சிவாச்சாரியார், விக்னேஸ்வர சிவாச்சாரியார் மேற்கொண்டு இருந்தனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவேந்திரராஜா, தக்கார் மற்றும் ஆய்வாளர் ஜனனி மேற்கொண்டிருந்தனர். விழாவில் திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரன், திமுக ஒன்றிய செயலாளர் கௌதமன், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவர் மெய்யழகன் பலர்இருந்தனர்

தொடர்புடைய செய்தி