தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோயிலில் நாளை திங்கள்கிழமை குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சாவூரிலிருந்து நாகை நோக்கிச் செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் மாரியம்மன் கோயில் புறவழிச்சாலை, கும்பகோணம் வழித்தட புறவழிச்சாலை, திட்டை புறவழிச்சாலை, மெலட்டூர், திருக்கருகாவூர், இரும்புத்தலை, சாலியமங்கலம் வழியாகச் செல்ல வேண்டும்.
நாகையிலிருந்து தஞ்சாவூரை நோக்கி வரும் அனைத்து கனரக வாகனங்கள் சாலியமங்கலத்திலிருந்து இரும்புத்தலை, திருக்கருகாவூர், மெலட்டூர், திட்டை புறவழிச்சாலை, கும்பகோணம் புதிய புறவழிச்சாலை, மாரியம்மன் கோயில் புறவழிச்சாலை வழியாக தஞ்சாவூருக்கு செல்ல வேண்டும்.
நாகையிலிருந்து தஞ்சாவூர் நோக்கி வரும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் சாலியமங்கலத்திலிருந்து பூண்டி, மாரியம்மன் கோவில், குளிச்சப்பட்டு சாலை சந்திப்பு, குளிச்சப்பட்டு சாலை, தளவாய்ப்பாளையம் சாலை, மாரியம்மன் கோவில் புறவழிச்சாலை வழியாக தஞ்சாவூருக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.