தஞ்சாவூர் பெரிய கோயில் உழவாரப் பணி தொடக்கம்

62பார்த்தது
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும், மதுரை உயர் நீதிமன்ற கிளையின் வழக்கறிஞர்களும் இணைந்து உலகப்பாரம்பரிய சின்னமாக போற்றி பாதுகாக்கப்படும். தஞ்சை பெரிய கோயிலில் குப்பைகளை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

நாட்டின் தேசிய சின்னங்களில் ஒன்றான உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் 1000 ஆண்டுக்கும் மேலாக கம்பீரமாக காட்சி அளிக்கும் கலை பொக்கிஷமாக திகழ்கிறது. பெரிய கோயிலை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்பதற்க்காக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் 50 பேரும், மதுரை உயர் நீதிமன்ற கிளையின் வழக்கறிஞர்கள் 12 பேர் என 62 வழக்கறிஞர்களும், தஞ்சை உழவார குழுவினர் 20 பேரும் தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்கள், சுற்றுலா பயணிகளால் போடப்பட்ட குப்பைகளை அகற்றி பெரிய கோயிலை தூய்மைபடுத்தும் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். காலை முதல் மதியம் 1 மணி வரை வெயிலையும் பொருட்படுத்தாமல் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

பெரிய கோயில் அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் ஒன்றிய தொல்லியல்துறை, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் வழக்கறிஞர்களின் உழவாரப் பணிகளை துவக்கிவைத்து அவர்களுக்கு வெப்பம் தனித்திட, தர்ப்பூசணி பழம், நீர்மோர் ஆகியவற்றி வழங்கி வழக்கறிஞர்களின் உழவாரப்பணியை பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி