தமிழ்ப் பல்கலை ஒருங்கிணைந்த முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கை

56பார்த்தது
தமிழ்ப் பல்கலை ஒருங்கிணைந்த முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கை
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 3 ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம், வரலாறு, கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆகிய துறைகளில் ஒருங்கிணைந்த முதுநிலை படிப்பில் சேர்வதற்கு மே மாதம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில், வரப் பெற்ற 75 விண்ணப்பங்களில் இனவாரி சுழற்சி அடிப்படையிலும், மதிப்பெண் அடிப்படையிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பல்கலைக்கழக பேரவைக் கூடத்தில் சேர்க்கை நடைபெற்றது. இதில் பங்கேற்ற 38 பேரில் 34 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளுவன், பல்கலைக்கழக இலக்கியத் துறை முன்னாள் தலைவர் கு. வெ. பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பதிவாளர் (பொறுப்பு) சி. தியாகராஜன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பெ. இளையாப்பிள்ளை, பேராசிரியர்கள் ச. கவிதா, ரா. தனலட்சுமி, ரா. சு. முருகன், சீ. இளையராஜா, ம. ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி