நாஞ்சிக்கோட்டை கோடை நெல் நடவுப்பணி தீவிரம்

80பார்த்தது
நாஞ்சிக்கோட்டை கோடை நெல் நடவுப்பணி தீவிரம்
நாஞ்சிக்கோட்டை பகுதியில் கோடை சாகுபடி நாற்று நடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகேயுள்ள நாஞ்சிக்கோட்டை, பஞ்சநதிக்கோட்டை, நடுவூர், செல்லம்பட்டி, தெக்கூர், வடக்கூர், பொய்யுண்டார் கோட்டை, ஆழிவாய்க்கால், நெல்லுபட்டு, காசவளநாடு புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து விவசாயிகள் கோடை சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்தனர். தற்போது நாற்றங்காலில் நாற்றுகள் பச்சை பசேலென பசுமையாக காட்சியளிக்கிறது. இந்த நாற்று விட்டு 30 நாள் ஆகிறது. இதையடுத்து நாற்றங்காலில் இருந்து நாற்றை பறித்து நடவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது மின்சார தட்டுப்பாடு ஏற்படுமோ? என்ற அச்சமும் விவசாயிகள் மத்தியில் உள்ளது. பருவ மழை பொய்த்ததால் கோடை சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். சம்பா, தாளடி அறுவடையை முடித்த விவசாயிகள் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பயத்தில் சில வயல்களில் நடவு செய்யாமல் கோடைகால பயிரான உளுந்து, பயறு, எள் போன்றவற்றை சாகுபடி செய்துள்ளனர்.

இதேபோல் பல விவசாயிகள் தண்ணீர் தட் டுப்பாட்டால் அறுவடை செய்யப்பட்ட வயல்களை தரிசாக விட்டுள்ளனர். மின் சாரம் தடையின்றி வழங்கினால் கோடை சாகுபடியை சமாளித்து விடலாம் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி