பூதலூரில் காணாமல் போன குழந்தை 2 மணி நேரத்தில் மீட்பு

1552பார்த்தது
பூதலூரில் காணாமல் போன குழந்தை 2 மணி நேரத்தில் மீட்பு
பூதலூரில் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இந்த ரயில்வே ஸ்டேஷனில் ஆந்திராவைச் சேர்ந்த திலீப், மனைவி ஷோபா குழந்தை மணிகண்டா (5 மாதம்) இவர்கள் ரயிலில் கீ செயின் விற்பனை செய்து வருகின்றனர். நேற்று இரவு வழக்கம் போல் ஸ்டேஷனில் பிளாட்பார்மில் படுத்து உறங்கிய பொழுது காலை 3: 30 மணி அளவில் அருகில் படுக்க வைத்திருந்த மணிகண்டாவை காணவில்லையாம். அனைத்து இடங்கள் தேடிப் பார்க்கும் கிடைக்காதால் உடனடியாக இது குறித்து பூதலூர் போலீசில் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சரவணன், தனசேகரன், தியானேஸ்வரன் அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனும் வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார். ஸ்டேஷனிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் மேற்கு பகுதியில் சென்று பார்க்கும் பொழுது எந்தவித பாதிப்பும் இன்றி குழந்தை கிடந்துள்ளது. உடனடியாக அந்த குழந்தையை மீட்டு அவர்களது பெற்றோரிடம் 6 மணி அளவில் ஒப்படைத்துள்ளனர்.

இதை யார் செய்தார்கள்? எதற்காக செய்தார்கள்? மேலும் குழந்தை கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் செய்தார்களா? அல்லது இவர்கள் மீது உள்ள கோபத்தில் யாரும் செய்தார்களா என்று பல்வேறு விதத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சுமார் 2 மணி நேரத்திலேயே குழந்தையை உயிருடன் மீட்டுக் கொடுத்த போலீசாரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி