மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

189பார்த்தது
மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மக்களை தேடி மருத்துவ ஊழியர்களை தொழிலாளியாக அங்கீகரித்து, பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஊக்கத்தொகை என்பதை மாற்றி ஊதியமாக வழங்க வேண்டும். ஸ்கோரிங் முறையிலான ஊக்கத்தொகையினை ரத்து செய்ய வேண்டும். பேறு கால விடுப்பு, பண்டிகை கால போனஸ் வழங்க வேண்டும். ஊதியத்தை ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.   நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும். பணி நேரத்தை வரையறை செய்ய வேண்டும். பணியிடத்தில் கண்ணியமாக நடத்த வேண்டும். கௌரவமான பணிச் சூழலை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, மக்களை தேடி மருத்துவ ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை காலை சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். வள்ளி தலைமையில் நடைபெற்றது.   சிஐடியு மாநிலச் செயலாளர்  சி. ஜெயபால், மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி. சாய் சித்ரா ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். இதில், சிஐடியு மாவட்ட பொருளாளர் பிஎன். பேர் நீதி ஆழ்வார், மாவட்டத் துணைச் செயலாளர் கே. அன்பு, ஆட்டோ சங்க மாநகரச் செயலாளர் ஏ. ராஜா, மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் ஆர். தமிழ் இலக்கியா, உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி