தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் கல்பதரு திருவிழா

164பார்த்தது
தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் கல்பதரு திருவிழா
தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் கல்பதரு திருவிழா நடந்தது. இதையொட்டி
சிறப்பு ஹோமம், ஆராதனை ஆகியவை நடைபெற்றன. பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 1886 ஜனவரி 1ஆம் தேதி அனைவருக்கும் ஆன்மீக விழிப்புணர்வு உண்டாகட்டும் என பொதுமக்களை ஆசீர்வதித்தார். அந்த நாள் கல்பதரு தினமாக ராமகிருஷ்ண மடத்தில் கொண்டாடப்படுகிறது.  
இதையொட்டி ராமகிருஷ்ண மடத்தின் கிராம மையமான புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, ஹோமம், சத்சங்கம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதான வழங்கப்பட்டது. பின்னர் மாலை 3 மணி அளவில் சிவாஜி நகர் மையத்தில் சிறப்பு ஆராதனை மற்றும் தியானம் நடைபெற்றது. ஸ்ரீ சத்யசாயி சேவா சமிதி குழுவினரின் சிறப்பு பஜனை நடைபெற்றது. 'உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்' என்னும் தலைப்பில் மருத்துவர் கலைமகள் மருத்துவ ஆலோசனை மற்றும் உணவுப் பழக்கத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினார். மேலும், பொது மக்களின் சந்தேகத்திற்கு பதில் அளித்தார். மாலையில் திருமூவர் ஆரத்தி நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஸ்ரீதர்சனியின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு ஆராதனை செய்து பிரசாதம் பெற்றனர்.  

இவ்விழாவில் ராமகிருஷ்ண மடத்தின் மூத்த தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்தானந்தா மகாராஜ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :