ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் மார்ச். 22ல் தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடக்கும் முதல் போட்டியில் KKR vs RCB அணிகள் மோதுகின்றன. போட்டி நடைபெறும் மைதானத்துக்குள் பாட்டில்கள், லைட்டர், இசை கருவிகள், எரியக்கூடிய மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள், ஆயுதங்கள், பட்டாசுகள், பைக் ஹெல்மெட்கள், உணவுகள் போன்றவற்றை ரசிகர்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மது, சிகரெட்களையும் பயன்படுத்தக்கூடாது.