சிவகங்கை: சிங்கம்புணரியைச் சேர்ந்த சிவக்குமார் சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆம்புலன்ஸில் சிங்கம்புணரி வந்துவிட்டு பின்னர் சென்னைக்கு செல்வதற்காக புறப்பட்டுள்ளார். தீயணைப்பு நிலையம் அருகே மதுரையில் இருந்து வந்த கார் மீது மோதி தாறுமாறாகச் சென்று எதிரே சாலையோரம் டீக்கடைக்குள் புகுந்தது. இதனைக் கண்டு டீக்கடை உரிமையாளர் வடிவேலு உள்ளே ஓடியதால் உயிர் தப்பினார். சிங்கம்புணரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாகனத்தை கைப்பற்றி ஓட்டுநரிடம் விசாரிக்கின்றனர்.