கல்லீரலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வைரஸாக ஹெபடைடிஸ் பி இருந்து வருகிறது. இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்தால் கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படும். இதனால் குழந்தை பிறந்த உடனேயே இந்த தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு டோஸ் தடுப்பூசி ரூ.20-50க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இதன் விலையை அனைத்து நிறுவனங்களும் 300 மடங்கு வரை உயர்த்தி உள்ளன. 3 டோஸ் கிட்டத்தட்ட ரூ.1,700 வரை விற்கப்படுகிறது.