தலையாட்டி பொம்மைகள் செய்முறை பயிற்சி

50பார்த்தது
தலையாட்டி பொம்மைகள் செய்முறை பயிற்சி
தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் தலையாட்டி பொம்மை குறித்த செய்முறை பயிற்சி முகாம் நடந்தது.

தஞ்சை மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை குறித்த செய்முறை பயிற்சி முகாம் அருங்காட்சியக வளாகத்தில் நடந்தது. பயிற்சியை தஞ்சை தலையாட்டி பொம்மை கலைஞர்கள் பாலு மற்றும் மணிகண்டன் ஆகியோர் வழங்கினர். சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை 75க்கும் அதிகமானோர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் தலையாட்டி பொம்மையை அவர்களே செய்து வண்ணம் தீட்டினர். சுற்றுலா அலுவலர் சங்கர், சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், தொழில் மைய உதவி இயக்குனர் செல்வம், தஞ்சை தாரகைகள் ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி