தஞ்சாவூரில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம்

68பார்த்தது
தஞ்சாவூரில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம்
தஞ்சாவூரில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் சீனிவாசபுரத்தில் தொடங்கப்பட்டது. இவ்விளையாட்டு ஆடுகளத்தினை பா. ஜ. க மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் திறந்து வைத்தார். மேலும் தஞ்சை அரண்மனை தேவஸ்தான மூத்த இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தொழில்திபர் ஆசிப் அலி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சுப்பிரமணியன் சர்மா, கருப்பையா, ஜெய் சதீஷ், முரளிதரன், பாஸ்கரன், வெங்கடேஷ், சரவணன், குலோத்துங்கன், மகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ரஜினி கணேசன், ஆடிட்டர் ரவிச்சந்திரன், அன்பழகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இறகுப் பந்து விளையாட விருப்பம் உள்ளவர்கள் 9441518987, 7010810314 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்ற ஆடிட்டர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். "
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி