சித்ரா பவுர்ணமி எதிரொலி, பூக்கள் விலை கடும் உயர்வு

50பார்த்தது
சித்ரா பவுர்ணமி எதிரொலி, பூக்கள் விலை கடும் உயர்வு
சித்ரா பவுர்ணமியையொட்டி தஞ்சையில் பூக்களின் விலை உயர்ந்து இருந்தது.

தஞ்சை பூக்காரத்தெரு, விளார்சாலை அண்ணாநகரில் பூ மார்க்கெட் உள்ளது. தஞ்சை மார்க்கெட்டுக்கு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வேதாரண்யம், ஓசூர், நிலக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் தினமும் பூக்கள் விற்பனைக் காக கொண்டு வரப்படுகிறது. பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த நாட்கள், மழை, பனிக்காலங்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப் சித்திரை மாத பவுர்ணமியையொட்டி தஞ்சை மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை உயர்ந்து இருந்தது.
விலை உயர்வு காரணமாக தஞ்சை பூ மார்க் கெட்டில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ரூ. 300 முதல் ரூ. 400 வரை விற்பனை செய்யப்பட்ட பூக்கள் எல்லாம் நேற்று ரூ. 600 வரை விற்பனையானது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 600- க்கும், முல்லைப்பூ ரூ. 600-க்கும், சம்பங்கி ரூ. 400-க்கும், கனகாம்பரம் ரூ. 600-க்கும், அரளி ரூ. 400-க்கும், செண்டிப்பூ ரூ. 100-க்கும், பன்னீர்ரோஸ் ரூ. 200-க்கும், ஆப்பிள் ரோஸ் ரூ. 250-க்கும் விற்பனையானது. இதேபோல் மருக்கொழுந்து உள்ளிட்ட அனைத்து வகை பூக்களின் விலையும் உயர்ந்து இருந்தது.

இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, சித்ரா பவுர்ணமியையொட்டி பூக்கள் விற்பனை நன்றாக இருந்தது. பூக்களின் விலையும் உயர்ந்தது. விலை உயர்ந்து இருந்தாலும் மக்கள் அதிக அளவில் வந்து பூக்களை வாங்கி சென்றனர்

தொடர்புடைய செய்தி