சிறந்த அறிவியல் படைப்புகளை கண்டறிவதற்கான அறிவியல் கண்காட்சி

76பார்த்தது
சிறந்த அறிவியல் படைப்புகளை கண்டறிவதற்கான அறிவியல் கண்காட்சி
திருவையாறு வட்டார வளமையம் சார்பில் சிறந்த அறிவியல் படைப்புகளை கண்டறிவதற்கான அறிவியல் கண்காட்சி அமல்ராஜ் மெடரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

திருவையாறு ஒருங்கிணைந்த வட்டார வள மையம் சார்பில் அனைத்து வகை பள்ளிகளுக்கு தஞ்சையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு திருவையாறு ஒன்றியத்திலிருந்து சிறந்த அறிவியல் படைப்புகளை கண்டறிவதற்கான அறிவியல் கண்காட்சி அமல்ராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
கண்காட்சி உணவு மற்றும் விவசாயம், கட்டிடக்கலை, வானியல், சூழல் கணிதம், மருத்துவம், ரோபாட்டிக்ஸ், மெய்நிகர் உண்மை, சைபர் பாதுகாப்பு, படிமங்கள் உள்ளிட்ட 11 தலைப்புகளில் மாணவர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர். கண்காட்சியை அமல்ராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சகாயராஜ் , பள்ளி முதல்வர் ப்ரஜெட்அமளி ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர். பள்ளியின் முதல் நிலை ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் வாழ்த்துரை வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரிய பயிற்றுனர்கள் பிரதீப், ரவிச்சந்திரன், ரேணுகா ஆகியோர் செய்திருந்தனர். வட்டார வளமையம் மேற்பார்வையாளர் சரவணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

தொடர்புடைய செய்தி