பட்டுக்கோட்டையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

63பார்த்தது
பட்டுக்கோட்டையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதுார் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (47). இவர் கடந்த 30 வருடங்களாக பட்டுக்கோட்டை சிவக்கொல்லை பண்ணவயல் ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மீன், இறால் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே தன் ஊருக்கு சென்று குடும்பத்தை பார்த்து விட்டு வருவது வழக்கம். இவர் தன் மனைவியிடம் வாழ்க்கை வெறுத்துப் போனதாக அடிக்கடி போனில் பேசுவாராம். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தன் மனைவியுடன் வீடியோ காலில் பேசிவிட்டு துாங்க சென்று விட்டார். காலையில் சக பணியாளர்கள் அவரது அறையில் சென்று பார்த்தபோது மின்விசிறியில் நைலான் கயிறு மூலம் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி