கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பேராவூரணி அருகே உள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழகத்தில், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட
திமுக பொறியாளர் அணி சார்பில், பொறியியல் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது. தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளரும், பட்டுக்கோட்டை எம்எல்ஏவுமான கா. அண்ணாதுரை துவக்கி வைத்தார்.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் பேராவூரணி எம்எல்ஏவுமான அசோக்குமார் முன்னிலை வகித்தார். பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் கைலாசம் வரவேற்றார். பட்டுக்கோட்டை பேராவூரணி தொகுதிகளை சேர்ந்த 24 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பட்டுக்கோட்டை தொகுதியில் அகல்யா, சுபியா, அகல்யா ஆகியோர் முதல் 3 இடங்களையும், பேராவூரணி தொகுதியில் சுவேதா, வினோதினி, துரையரசன் முதல் 3 இடங்களையும் பெற்றனர். ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற்ற முதல் 3 பேர் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான பேச்சுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் முதலிடம் பெறுபவருக்கு பரிசாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்பட உள்ளது. விழாவில் அசோக்குமார் எம் எல் ஏ கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட
திமுக பொறியாளர் அணி சார்பில் வழங்கப்பட்ட தலா ரூ. 10, 000 ரொக்கப் பரிசை வழங்கி பாராட்டினார். முடிவில் தஞ்சை தெற்கு மாவட்ட பொறியாளர் அணி மாவட்ட தலைவர் தர்மலிங்கம் நன்றி கூறினார்.