ஒன்றிய அரசைக் கண்டித்து பேராவூரணியில் தவெக ஆர்ப்பாட்டம்,

55பார்த்தது
வக்ஃப் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

வக்ஃப் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசல் அருகில், மதியம் 2 மணியளவில், பேராவூரணி தொகுதி இளைஞர் அணி தலைவர் வி. ஆர். கண்ணதாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் கிருபாகரன், மகளிர் அணி தலைவர் வைஜெயந்திமாலா, சேதுபாவாசத்திரம் ஒன்றிய பொருளாளர் அற்புதராஜ், பேராவூரணி தொகுதி செயலாளர் மணிகண்டன், சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் ஜெகன்னாத், புதுப்பட்டினம் ஊராட்சி கிளை செயலாளர் அஜித், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலாளர் அப்துல் சலாம் மற்றும் முஸ்லிம் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். இதில் சிறுபான்மையினருக்கு எதிராக வக்ஃபு சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கும் வக்ஃபு திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி