கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலய தேர்பவனி நேற்று நடந்தது.

72பார்த்தது
கும்பகோணம் காமராஜர் சாலையில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய அலங்கார அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெருவிழா தேர் பவனி விமர்சையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பெருவிழா கடந்த 6- ந் தேதி ஆண்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு திருப்பலியும், சிறிய தேர்பவனியும், பல்வேறு தலைப்புகளில் அருட்தந்தையர்களால் மறையுரையும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்றிரவு நடந்தது. முன்னதாக மாலை 6. 30 மணிக்கு கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் தலைமையில், மறைமாவட்ட முதன்மை குரு பிலோமின்தாஸ், மறை மாவட்ட பொருளாளர் அந்தோணி ஜோசப், முன்னாள் பங்கு தந்தையர்கள், அருட்சகோதரிகள் ஆகியோருடன் திருப்பலி நடந்தது. திருப்பலியில் ஆயர் மறையுரை ஆற்றினார். தொடர்ந்து புனிதமிக்கேல் சமண்ஸ், புனித அருளானந்தர், புனித அந்தோணியார், புனித செபஸ்தியார் மற்றும் தூய அலங்கார அன்னை ஆகியோர் தனித்தனியாக 5 தேர்களில் ஆலயம் முன்பு எழுந்தருளினர்.

*தேர் பவனி*

பின்னர் ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் 5 தேர்களுக்கும் மந்திரிப்பு செய்தார். தொடர்ந்து இரவு 8. 30 மணிக்கு புனித அலங்கார அன்னை ஆடம்பர தேர்பவனியை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இந்த தேர் பவனியாது தூய அலங்கார அன்னை பேராலயத்தில் தொடங்கி ரயில் நிலையம் மற்றும் மகாமக குளம் வரை சென்றது

தொடர்புடைய செய்தி