தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு ஊராட்சி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பவளக்கொடி, இதேபோல், மழையால் வீடு பாதிக்கப்பட்ட முதுகாடு ஊராட்சி ராஜகுமாரி, லோகாம்பாள், மலர்கொடி, கண்ணம்மா, வள்ளியம்மாள், அரும்பு, கொளக்குடி ஊராட்சி ராதிகா ஆகியோருக்கு தலா ரூ. 5 ஆயிரம் என 8 பேருக்கு மொத்தம் ரூ. 40 ஆயிரம் வழங்கினார். தொடர்ந்து பேராவூரணி ஒன்றியம் வலப்பிரமன்காடு, சொர்ணக்காடு ஆகிய இடங்களில் வீடு பாதிக்கப்பட்ட சோ. மாரிமுத்து, முனியாண்டி, அய்யாச்சாமி, ஆர். சுதாகர், எம். எம். சேகர், இந்திரா, புனல்வாசல் பத்மினி, பழைய பேராவூரணி சி. சிவக்குமார் ஆகியோருக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் 8 பேருக்கு ரூ. 40 ஆயிரம் வழங்கினார்.
அப்போது, திமுக பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க. அன்பழகன், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர்
வை. ரவிச்சந்திரன், பேராவூரணி வடக்கு ஒன்றியச் செயலாளர் கோ. இளங்கோவன், பேராவூரணி நகரச் செயலாளர் என். எஸ். சேகர், , பேராவூரணி ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு உறுப்பினர் குழ. செ. அருள்நம்பி,
மாவட்டப் பிரதிநிதி ஆர். பூமிநாதன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் என். குலாம்கனி (ஊமத்தநாடு), கௌரி சரவணமுத்து (முதுகாடு)
வி. பழனிவேல், ஏ. நீலகண்டமூர்த்தி, இளங்கோ, இளைஞர் அணி ஆரோ. அருள் மற்றும் கிராம பொதுமக்கள் உடனிருந்தனர்.