பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

72பார்த்தது
பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்
பேராவூரணியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க பேராவூரணி வட்டத் தலைவர் நாவலரசன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் ஸ்ரீ மகேஷ்,   வட்டச் செயலாளர் ரமேஷ், சத்துணவு ஊழியர் சங்க சேதுபாவாசத்திரம் தலைவர் ராஜேஸ்வரி, முன்னாள் வட்டச் செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இதில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். 21 மாத கால நிலுவைத் தொகை முடக்கப்பட்ட அகவிலைப்படி பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு கால முறை ஊதியம் தொகுப்பூதியம் மதிப்பூதியம் பெறும் 3. 5 லட்சம் ஊழியர்களுக்கு  வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும் ஓய்வூதியமும் வழங்கிட வேண்டும்.

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். அரசுத்துறை காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 7ஆண்கள், 40 பெண்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி முத்துராமன் நன்றி கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி