ஆலத்தூர் காருடைய அய்யனார் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

59பார்த்தது
ஆலத்தூர் காருடைய அய்யனார் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
ஆலத்தூர் காருடைய அய்யனார் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூரில் காருடைய அய்யனார், வீரனார் கோவில் உள்ளது. இந்தகோவிலில் சித்திரை திருவிழா கடந்த 10- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சித்ரா பவுர்ணமியை யொட்டி காப்பு கட்டும்
தொடர்ந்து காவடி, அக்னி காப்பரை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழா நாட்களில் ஒவ்வொருநாளும் மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சி யான தேரோட்டம் நடந்தது. முன்னதாக தேரில் காருடைய அய்யனார், வீரனார் எழுந்தருளினர். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக் கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலை சுற்றி வலம் வந்தது.

அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, மதுக்கூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் சி. சி. டி வி. கேமரா அமைக்கப் ணிப்பு பணியில் ஈடுபட்டனர் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டு இருந்தது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்கள், சரக ஆய்வாளர் பட்டுக்கோட்டை ஜெயசித்ரா, ஆலத்தூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி