தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அதிமுகவினர் உதவி

51பார்த்தது
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அதிமுகவினர் உதவி
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட கூப்புளிக்காடு கிராமத்தில் கருப்பையன் என்பவரது வீடு தீப்பிடித்து எரிந்ததை அறிந்து, அதிமுக முன்னாள் எம்எல்ஏ மா. கோவிந்தராசு சார்பில், பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் கோவி. இளங்கோ நேரில் சென்று பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.

அப்போது சேதுபாவாசத்திரம் ஒன்றிய கழகச் செயலாளர் கே. எஸ்அருணாச்சலம்,
பேரூராட்சி கவுன்சிலர்கள் பழைய பேராவூரணி ஆனந்தன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் கூப்புளிக்காடு மூர்த்தி, ஆதனூர் ஆனந்தன், பழையபேராவூரணி கிருஷ்ணமூர்த்தி, டி. கே. சுப்பிரமணியன்,
மாவட்ட பிரதிநிதி கோ. பா. ரவி,
எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாண்டியராஜன்,
பாசறை செயலாளர் கணேசன் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர். கே. சிவா, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருள் உள்ளிட்ட ஏராளமான கழக உடன்பிறப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி