தமிழ்நாட்டில் முழு ஆண்டு தேர்வு முடிந்து விடப்படும் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியானது. 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்.22ஆம் தேதியில் இருந்தும், 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.25ஆம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக 1 முதல் 9ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணை வெளியானது.