வறுமை மற்றும் பசி ஒழிப்புக்கான இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா (IBSA) நிதிக்கு பிப்ரவரி 2024ஆம் ஆண்டில், இந்தியா 1 மில்லியன் டாலர்களை வழங்கியது. இது தொடங்கப்பட்டதில் இருந்து இந்தியா தொடர்ந்து இந்த நிதிக்கு பங்களித்து வருகிறது. மொத்தம் 15.1 மில்லியன் டாலர்களை பங்களித்துள்ளது. IBSA நிதியத்தின் திட்டங்கள், உலகளாவிய தெற்கில் உள்ள கூட்டணி நாடுகள் தங்கள் தேசிய முன்னுரிமைகள் மற்றும் சர்வதேச அளவில் உள்ள பிற வளர்ச்சி இலக்குகளை அடைய உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.