சென்னையை சேர்ந்த இப்ராகிம் பாட்சா (54) மற்றும் சம்சத் பேகம் (50) ஆகியோர் அண்ணன் - தங்கை ஆவர். இருவரும் கோவைக்கு சென்று ஓட்டலில் அறை எடுத்து தங்கி தூக்க மாத்திரையை சாப்பிட்டனர். இதில் பேகம் உயிரிழந்த நிலையில் உயிர்பிழைத்த பாட்சா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். போலீஸ் நடத்திய விசாரணையில் உடல் பருமனால் அவதிப்பட்டதால் வாழ பிடிக்காமல் இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது.