வயலில் மேய்ச்சலுக்கு விடப்படும் வாத்துக்கள்

83பார்த்தது
தஞ்சை மாவட்டத்தில் முன்பட்ட கோடை அறுவடை பணிகள் முடிந்துள்ள விளைநிலங்கள் சமன் படுத்தும் பணிகளுக்கு விவசாயிகள் வாத்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சுற்றுப்புற கிராமங்களில் ஆழ்குழாய் பாசனம் மூலம் தாளடி நெல் சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அறுவடை பணிகள் முடிந்துள்ளன. தொடர்ந்து குறுவை சாகுபடி பணிகள் தொடங்குவதற்கு நிலம் சமன்படுத்துவதற்கு வாத்துகளை மேய விட்டு உள்ளனர். இதற்காக திருக்கோவிலூரில் இருந்து சுமார் 30 ஆயிரம் வாத்துகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இவர்கள் 5 குழுவாக பிரிந்து அறுவடை வயல்களில் வாத்துகளை மேய்த்து வருகின்றனர்.

வாத்துகள் வயவில் மேய்வதன் மூலம் அறுவடை வயலில் தாழ் சமன் ஆகும். மேலும் வயலில் சிதறி கிடக்கும் நெல் மணிகளை வாத்துகள் உண்பதால் அடுத்த போகம் சாகுபடியில் கலப்பு நெல் இருக்காது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி