பாபநாசம் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி
பாபநாசம் பேரூராட்சி ஒன்பதாவது வார்டு காணியாளர் தெருவில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி முகாம் நடைபெற்றது. அதே சமயம் அனைத்து தெருக்களிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் புகை மருந்து அடிக்கப்பட்டது. இந்த பணியினை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் நேரில் பார்வையிட்டார். ஆய்வின் போது பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.