அதிமுகவுடன் கூட்டணி என்பது முற்றிலும் தவறானது என தமிழக வெற்றிக் கழகம் விளக்கம் அளித்துள்ளது. மக்களை குழப்பும் நோக்கில் தவெக தொடர்பாக உண்மைக்கு மாறான செய்திகள் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கூறுகையில், “அதிமுகவுடன் தவெக கூட்டணி என்பது முற்றிலும் தவறானது, அடிப்படை ஆதாரமற்றது” என தெரிவித்துள்ளார். மேலும், தவெக தலைவர் விஜய்யின் ஒப்புதல் பெற்று செய்திக் குறிப்பு வெளியிடப்படுவதாக ஆனந்த் தெரிவித்துள்ளார்.