சென்னை அண்ணா சாலையில் இருந்த ’சாந்தி’ தியேட்டரை யாராலும் மறக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்ட இந்த தியேட்டர் நடிகர் சிவாஜி குடும்பத்தாருக்கு சொந்தமானது. சிவாஜி, பிரபு, விக்ரம் பிரபு நடித்த திரைப்படங்கள் இங்கும் தவறாமல் வெளியாகும். மற்ற பெரிய படங்களும் வெளியாகும். தியேட்டர் வாசலில் உள்ள சுவரில் சிவாஜியின் அனைத்து திரைப்படங்களின் பட்டியலும், அது எத்தனை நாட்கள் ஓடியது என்ற விபரமும் இருக்கும்.