மண்டல அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி

71பார்த்தது
மண்டல அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி
பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் மக்களவைத் தேர்தல் 2024 எதிர்வரும் வாக்குப்பதிவு நாள் 19/4/2014 அன்று மண்டல அலுவலர்களால் வழங்கப்படும் அனைத்து படிவங்கள் வாக்குச்சாவடி தலைமை அலுவலரால் கையாளப்படுவது மற்றும் வாக்குப்பதிவு முடிந்து சீலிடுவது குறித்தும்  அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டது.
இப் பயிற்சியில் தேசிய தேர்தல் பயிற்சியாளர் கஜேந்திரன், பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன், தேர்தல் துணை வட்டாட்சியர் விவேகானந்தன், மண்டல துணை வட்டாச்சியர் பிரபு ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். பயிற்சி முகாமில் 26 மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி