அதிக வெயில், மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

72பார்த்தது
அதிக வெயில், மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதுடன் தொடர்ச்சியாக, 13 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெயிலின் வெப்பம் பதிவாகி வருகிறது.
இதற்கிடையே பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஏரிகள், குளங்கள், கிணறுகள் என அனைத்து நீர்நிலைகளும் வறண்டு காட்சியளிக்கின்றன. மேலும் விவசாயிகள், பொதுமக்கள், கால்நடைகள் மழை இல்லாததால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.  
தமிழகத்தில் மழை வேண்டி இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று கூடி ஆங்காங்கே தொழுகைகள் நடத்தி வருகிறார்கள்.
அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பண்டாரவாடை கிளை சார்பில் தமிழகத்தில் மழை பெய்து வளம் பெருக வேண்டி நபி வழியில் சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகையில் கிளையின் தலைவர் இக்பால் செயலாளர் சகாபுதீன் பொருளாளர் சாகுல் ஹமீது   தொழுகை நடத்திய ஷேக் தாவூத். உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அவர்கள் கைகளை உயர்த்தி, கண்ணீர்‌ மல்க அனைவருக்காகவும் பிராத்தனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி