இறுதி கட்டத்தை நெருங்கும் 'வேட்டையன்' படப்பிடிப்புகள்

85பார்த்தது
இறுதி கட்டத்தை நெருங்கும் 'வேட்டையன்' படப்பிடிப்புகள்
ரஜினிகாந்த் நடிப்பில் த.செ ஞானவேல் இயக்கி வரும் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மொத்த படப்பிடிப்பையும் மே மாத இறுதிக்குள் முடித்து, படத்தின் இசை வெளியீடு, ட்ரெய்லர் குறித்த அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பாடல் காட்சிகள் மற்றும் அமிதாப்பச்சன் உடனான காட்சிகள் மட்டும் மீதம் இருக்கும் நிலையில் மே மாதத்திற்குள் அனைத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி