விவசாயிகள் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்

53பார்த்தது
தில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்று, செயல்படுத்த வேண்டும் என்றார் அனைத்து விவசாயிகள் சங்தங்களின் ஒருங்கிணைணைப்பு குழு மாநிலத் தலைவர் பி. ஆர். பாண்டியன்

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி வி. எஸ். வீரப்பன் தலைமையில் செவ்வாய்க்கி ழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பி. ஆர். பாண்டியன் மேலும் தெரிவித்தது: தில்லியில் விவசாயிகள் தொடர்ந்து
போராடுகிறார்கள். கொடுத்த வாக்குறுதியை பிரதமர்மோடி நிறைவேற்ற மறுக்கிறார். இதனால் விவசாயிகள் போராட்டம் இந்தியா முழுவதும் தீவிரமடையும். 13 கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும். மறுத்தால் பாஜகவுக்கு எதிராக வரும் மக்களவைத் தேர்தலில் விவசாயிகள் வாக்களிக்க தயங்க மாட்டார்கள் என்றார்.
நிகழ்ச்சியில் தலைவர் எல். பழனியப்பன், மாவட்டச் செயலர் எம். மணி, கெளரவத் தலைவர் திருப்பதி வாண்டையார், ஒன்றிய செயலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி