உலகம் முழமுழுவதும் தனித் தனியாக பிரிந்து கிடைக்கும் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்தால் உலகின் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்க முடியும் என்று வரலாறு மூலம் நாம் அறியலாம். 90 சதவீதம் உள்ள தொழிலாளர் வர்க்கத்தை வெறும் 10 சதவீதமே உள்ள முதலாளிகள் வர்க்கம் தனது சாட்டியடிக்கு ஏற்றவாறு ஆடச் செய்யும் அவலம் இன்னும் தீர்ந்த பாடில்லை. உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட்டால் யுகப் புரட்சி ஏற்படுவது உறுதி. ஆனால் அவர்கள் ஒன்று சேரந்து தங்கள் உரிமைகளுக்காக குரல் உயர்த்த விடாமல் செய்ய உலக முதலாளிகள் ஒன்றுபட்டுள்ளதே இன்றைய முதலாளித்துவ உலகின் தந்திரம் ஆகும்.