புதுச்சேரி, முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி பலாத்கார முயற்சியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுமியின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சிறுமி கடைசியாக விளையாடிய பொருட்களை வைத்து அதற்கு முன் விளக்கு ஏற்றி, சிறுமிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர் உறவினர்கள்.