அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்திய விசி கட்சியினர் கைது

85பார்த்தது
கும்பகோணத்தில் நேற்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 30 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பகோணம் புறபழிச்சாலையில் நடைபெற்ற சங்க மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் சாய்க்கப்பட்டது அது தொடர்பாக தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய வருகின்றனர் இந்த நிலையில் வீசி கொடிக்கம்பத்தை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி நீதிமன்ற ரவுண்டானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாநகரச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர்.

அப்போது அங்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜி கீர்த்திவாசன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்றார்.

வழக்கறிஞர் சா விவேகானந்தன் அவர்களிடம் முறையாக அனுமதி கேட்டு விண்ணப்பித்தோம் அனுமதி தரவில்லை ஆனால் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார் அதனை தொடர்ந்து விசிக கட்சியினர் கொடிக்கம்பத்தை அகற்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி முறையிட்டனர் அதனைத் தொடர்ந்து அனைவரும்அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 40 பேர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி