டெல்லி ஆக்ராவில் ஐடி ஊழியர் மானவ் சர்மா, தனது மனைவி தன்னை துன்புறுத்துவதாகக் கூறி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், திருமணத்திற்கு புறம்பான உறவை வெளிப்படையாக பேசும் மானவ் மனைவி நிகிதா சர்மாவின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், நிகிதா முன்பு அபிஷேக் என்பவருடன் உடலுறவு வைத்திருந்ததாகவும், அதே போல் தனது மாமா தன்னை வற்புறுத்தி பாலியல் அத்துமீறியதாகவும் கூறியுள்ளார்.
இவர்கள் இருவருடனான தொடர்பை அறிந்து கணவர் இவ்வாறு செய்துவிட்டதாக கூறியுள்ளார்.