தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாககுளக்கரையில் வைத்த விநாயகர் சிலையை சனிக்கிழமை இரவு போலீஸார் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் மகாககுளக்கரையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையில் அனுமதியின்றி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறி காவல் துணைக்கோட்ட கண்காணிப்பாளர் ஜி. கீர்த்திவாசன் தலைமையில் போலீஸார் விநாயகர் சிலையை அகற்றி வாகனத்தில் ஏற்றி மேற்கு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதை கண்டித்து மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் சிலை பிரதிஷ்டை செய்த இடத்தில் தரையில் அமர்ந்து முழக்கமிட்டனர். இது பற்றி பாஜக நிர்வாகி ஒருவர் கூறும்போது, நாங்கள் சிலை வைக்க அனுமதி கேட்டு மனு கொடுத்துதான் சிலை பிரதிஷ்டை செய்தோம். ஆனால் போலீஸார் அனுமதி தராமல் இழுத்து தாமதம் செய்து திட்டமிட்டு சிலையை அகற்றினர் என்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.