தஞ்சை: குடியரசு தினம்.. கச்சத்தீவில் தேசியக் கொடியை ஏற்றவேண்டும்

52பார்த்தது
இந்துமக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் நேற்று மத்திய-மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீன்பிடி வலை, பொம்மை துப்பாக்கியை ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் பாலா தலைமை தாங்கினார். 

மாநகர தலைவர் பிரபாகரன், மாவட்ட அமைப்பாளர் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டும். 

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும். கச்சத்தீவு பகுதியில் இந்திய கடற்படையின் ரோந்து கப்பலின் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் ஹிருத்யா விஜயனிடம் தேசிய கொடியுடன் கோரிக்கை மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி