கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தர் விஜய விழா

50பார்த்தது
கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தர் 1897ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி விஜயம் செய்து, தொடர்ந்து மூன்று நாட்கள் தங்கி இருந்து வேதாந்தப்பணி எனும் தலைப்பில் வரலாற்றுச் சிறப்புமிக்கசொற்பொழிவாற்றினார். விவேகானந்தர் விஜயம் செய்த 129ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் சுவாமி விவேகானந்தரின் வரலாற்றை ஓவியமாக, சிற்பங்களாக, விளம்பர கலை டிஜிட்டல் மற்றும் வரலாற்று நிகழ்வுகளை வடிவமைத்தனர். சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் சுவாமி விவேகானந்தர் ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டது. கண்காட்சியை
அகில பாரதிய சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமத் சுவாமி வேதாந்த ஆனந்தா, மேற்கு வங்காளம் தாருகாட்சி ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமம் ஸ்ரீமத் சுவாமி ஜபபிரியானந்தா மகராஜ், திருவண்ணாமலை ஸ்ரீமத் சுவாமி மாத்ரு சேவானந்தா, நன்னிலம் சுவாமி கோரக்ஷனந்தா சரஸ்வதி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர்.
கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வித்தனர். கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலர் சுந்தர், அரசு கவின் கலைக்கல்லூரி முதல்வர் (பொ) ரவி, பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி