ஆளுநருக்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “அரசியல் சாசனத்தின் அடிப்படையில், ஆளுநர், மாநில அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர். எந்த காரணத்தையும் கூறாமல் மசோதாவை கிடப்பில் போட்டு வைப்பது சட்ட விரோதம். அரசியல் சாசன விதிகளுக்கு புறம்பாக செயல்படுவதால்ஆளுநருக்கு எதிராக உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு நாளை (பிப்.06) உச்ச நீதிமன்றத்தில் முதல் வழக்காக விசாரணைக்கு வருகிறது.