விருதுநகர்: சிவகாசி அருகே உள்ள சதானந்தபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (பிப். 05) ஏற்பட்ட வெடி விபத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டார். 4 பெண்கள் உள்பட 5 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர், 8 அறைகள் இடிந்து தரை மட்டமாகின. விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் மோகன் ராஜ் மற்றும் போர்மேன் செல்வராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.