திருப்பரங்குன்றம் விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் இந்து மக்கள் அசைவ உணவு சாப்பிடுவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கோரிக்கை வைத்ததாக ஒரு தகவல் பரவியது. இதை மறுத்துள்ள எச். ராஜா, "இந்து ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் நான் சொன்னதாக தவறான செய்தியை உருவாக்கிய இந்து விரோத நபர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க காவல்துறையில் புகார் கொடுத்துள்ளேன்” என்றார்.