காவிரி கரையில் அணுகு சாலை ஆய்வு

66பார்த்தது
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில், கடந்த சட்டமன்றப் பேரவையில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்களின் கோரிக்கை விடுத்ததின்பேரில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு எ. வ. வேலு அவர்களின் உத்தரவின்படி, கும்பகோணம் – நீலத்தநல்லூர் – மதனத்தூர் சாலை குறுகலாக இருப்பதனை அகலப்படுத்தவும், காவிரிக் கரை அணுகு சாலை மற்றும் மூன்றாம் கட்ட புறவழிச்சாலை பணிகளை குறித்து, நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் முன்னிலையில், திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில் அவர்கள் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில் அவர்கள், நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்களிடம், இந்த பணிகள் விரைவாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். நிகழ்வில், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயரும், மாநகர திமுக செயலாளருமான சு. ப. தமிழழகன் அவர்கள், கும்பகோணம் வட்டாட்சியர் பு. வெங்கடேஸ்வரன் அவர்கள், தஞ்சாவூர் கோட்ட பொறியாளர் செந்தில்குமார் அவர்கள், கும்பகோணம் உதவி கோட்ட பொறியாளர் செந்தில் தம்பி அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ச. பார்த்திபன் அவர்கள், டி. ஆர். அனந்தராமன் அவர்கள், கும்பகோணம் அட்லஸ் மாடுலர் கிச்சன் சிராஜ் அவர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி