மதுரை எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக ‘கண்டா வரச் சொல்லுங்க’ என வண்டியூர், சௌராஷ்டிராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், “இரண்டு முறை வெற்றிப் பெற்றும், வண்டியூர் மக்களுக்கு நன்றி கூட சொல்ல வராத மதுரை எம்பி” என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாலைகள் சேதமடைந்து மழை நீர் தேங்கியுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் தங்கள் பகுதிக்கு வரவில்லை என கூறி பொதுமக்கள் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர்.