ஆரிய படை வீடு ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம்

83பார்த்தது
கும்பகோணம் தொகுதி, ஆரியப்படைவீடு ஊராட்சியில், மக்கள் நேர்காணல் முகாம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திரு தீபக் ஜேக்கப் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றபோது, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மகளிர் சுய உதவிக்குழுக்களின் சிறப்பு கண்காட்சியை பார்வையிட்டு, வேளாண்மை பொறியியல் துறை சார்பாக, இரண்டு பயனாளிகளுக்கு, கை டிராக்டர்கள், இலவச மனை பட்டா, மற்றும் பெண்கள் சுய உதவிக் குழுவுக்கு காசோலை வழங்கப்பட்டது. மேலும் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில், 2067 குடும்பத்தினர்களுக்கு, தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல் மற்றும் கும்பகோணம் கிராமப் பகுதிகளில், 41 இடங்களில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திரு தீபக் ஜேக்கப் IAS அவர்களிடம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில், மாநிலங்களை உறுப்பினரும், தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான சு. கல்யாணசுந்தரம் அவர்கள், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சுதா அவர்கள், வருவாய் கோட்டாட்சியர் செ. பூர்ணிமா அவர்கள், வட்டாட்சியர் பு. வெங்கடேஸ்வரன் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ் அவர்கள், சிவக்குமார் அவர்கள், மற்றும் ஏராளமான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்,

தொடர்புடைய செய்தி