பித்தளை பாத்திரத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம் நீடிப்பு

76பார்த்தது
பித்தளை பாத்திரத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம் நீடிப்பு
கும்பகோணம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் 150-க்கும் அதிகமான பித்தளை பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேலான தொழிலாளா்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனா்.

கும்பகோணம் ஐசிசி பித்தளை பாத்திரத் தொழிலாளா்கள் சங்கம், கும்பகோணம் பித்தளை கூலி பட்டறை பாத்திர உற்பத்தியாளா்கள் சங்கம் ஆகிய 2 சங்கங்களுக்கு இடையே 2021 ஆம் ஆண்டு மாா்ச் 26 ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதன் மூலம் கூலி உயா்வு வழங்கப்பட்டு, பித்தளை பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. கூலி உயா்வு தொடா்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய பேச்சுவாா்த்தையை உடனே நடத்த வலியுறுத்தி ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் பித்தளை பாத்திரத் தொழிலாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், கும்பகோணம் ஐசிசி பித்தளை பரத்திரத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் ஆா். பக்கிரிசாமி தலைமையில் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளா்கள், கும்பகோணம் பித்தளை கூலி பட்டறை பாத்திர உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ஆா். ரவிச்சந்திரன் தலைமையில் 50-க்கும் அதிகமான உற்பத்தியாளா்கள் பங்கேற்ற பேச்சுவாா்த்தை நேற்றுநடைபெற்றது.

இதில், உடன்பாடு ஏற்படாததால், வேலை நிறுத்தப்போராட்டம் நீடிக்கிறது. கடந்த 35 நாட்களாக நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் ரூ. 10 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி